யாழ் மாநகர சபையின் முறையற்ற கழிவு முகாமைத்துவத்தினால் பொதுமக்கள் அவதி!
யாழ் மாநகர சபையின் முறையற்ற கழிவு முகாமைத்துவம் காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக காக்கைதீவை அண்டிய கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான காக்கை தீவுப் பகுதியில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்படாது அல்லது மீழ் சுழற்சிக்கி உட்படுத்தப்படாது தீ வைத்து கொளுத்தப்படுகிறது.
இதனால் அயலில் உள்ள கிராம மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுதாகவும், நோய்வாய்ப்பட்டு வருவதாகவும், பிரதேச மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்