உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வரலாற்றில் என்றுமில்லாதவாறு சீர்குலைந்துள்ள நீதித்துறை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
61 பார்வைகள்

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் உதார ஜயவீரவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார்.

“சர்வஜன அதிகாரம் கட்சியானது, நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடத்தை நிரப்பி, ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அநியாயமாக இழக்கப்பட்ட நாட்டின் ஆற்றல்களையும் வளங்களையும் மீண்டும் கட்டியெழுப்பி, நாட்டு மக்களுக்கு ஒரு சரியான திசையைக் காட்டுவதே எமது பயணத்தின் இலக்காகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் மாத்திரமல்லாது, சமூக, கலாச்சாரக் கட்டமைப்புகளும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய திலித் ஜயவீர, நீதித்துறையின் தற்போதைய நிலை குறித்தும் கருத்து தெரிவித்தார்.

“நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைந்து போயுள்ளது. இது குறித்து நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளும், நேர்மையான நீதிபதிகளும் கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானது. அதேபோல், சட்டம் ஒழுங்கு, பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம் எதிர்கொண்டுள்ளோம்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0