உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அவசியமற்ற விளக்கமறியலே சிறை நெருக்கடிக்கு காரணம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
52 பார்வைகள்

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலைமைக்கு, ஒவ்வொரு சந்தேகநபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரும் சட்டமா அதிபர் பிரிவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கும் நடைமுறையே பிரதான காரணமாக அமைகின்றது என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

குற்றத்தின் தன்மையை ஆராயாமல், சந்தேகநபர் ஒருவருக்கு வழங்கப்படும் முதல் தண்டனையாக விளக்கமறியலில் அடைப்பதையே தற்போதைய நடைமுறையாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைப்படுத்தாமல் வெளியில் வைத்தே விசாரிக்கக்கூடிய வழக்குகளுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது கவலைக்குரியது என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

கைதிகள் கொள்ளளவுக்கு அதிகமாகச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளமையால், அவர்களைப் பராமரிப்பதற்கான அரச செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நெருக்கடிக்குத் தீர்வாக, அவசியமற்ற முறையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்கும் நடைமுறையைத் தவிர்த்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நேரடியாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாகப் பல முன்மொழிவுகள் தற்போது நீதி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0