உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீதி அமைச்சர் பதவி விலகி மன்னிப்பு கோர வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
74 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும வலியுறுத்தினார்.

கம்பஹாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளமை துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட அவர், “மோதல் இடம்பெற்ற முதல் நாளில் இரண்டு கைதிகள் மட்டுமே உயிரிழந்திருந்தனர். அன்று சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அங்கிருந்து அகற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்திருக்காது. எமது சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.

விடயத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சர், இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் எந்தத் தகவலும் இன்றி இருந்தார் என்றும், சமூக வலைத்தளங்களைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வது போன்றே ஊடகங்களுக்குப் பதிலளித்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“பொறுப்புவாய்ந்த அமைச்சரிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற பதில்களை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சரியாகச் செயற்பட்டிருந்தால் இந்தத் துயரத்தைத் தடுத்திருக்கலாம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசு எடுத்த தீர்மானத்தை வரவேற்ற அஜித் மான்னப்பெரும, அதேநேரம் உயிரிழந்த கைதிகளின் விடயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சிறையில் இருந்த அனைவரும் குற்றவாளிகள் அல்லர், அவர்களில் சந்தேகநபர்களும் அடங்குவர் என்பதால், அவர்களுக்காகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0