உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீதித்துறையில் அரசியல் தலையீட்டை எதிர்க்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பொதுஜன பெரமுன அழைப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
85 பார்வைகள்

நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அரசின் இந்த முயற்சி ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பாரதூரமான அச்சுறுத்தல் என்று சாடியுள்ளார்.

“அரசின் இத்தகைய முயற்சி ஒரு வெட்கக்கேடான செயலாகும். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவே அரசு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதன் மூலம் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சுதந்திரமான செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்பதுடன், அது நீதித்துறையின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கும்.” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்றும், சட்டத்தரணிகள் சங்கமும் இதற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இது குறித்துப் பேச்சு நடத்தியதைக் குறிப்பிட்ட சாகர காரியவசம், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாகக் கவனம் செலுத்துவார் என்று தான் நம்புகின்றார் என்றும், ஜனநாயகத்துக்கு எதிராக வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்க்கத் தனது கட்சி உறுதியுடன் செயற்படும் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0