உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

திடீரென பரவிய காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
98 பார்வைகள்

தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா பிராந்தியத்தில் உள்ள அல்மேரியா மாகாணத்தில் திடீரெனப் பரவிய காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 19 பேரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வியாழக்கிழமை மதியம் லாஸ் காஸார்டோஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, பலத்த காற்று மற்றும் ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு அதிவேகமாகப் பரவியது.

தீயில் சிக்கித் தப்பிக்க முயன்ற போது வாகனங்களுக்குள்ளேயே மாட்டிக்கொண்டு பலர் உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்கோர விபத்தில் காயமடைந்த 6 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் பிரிவு (UME) உட்பட 300-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பலத்த புகைமூட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள இரு முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்ததே இந்தத் தீ விபத்திற்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பிராந்தியத்தில் மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0