உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
12 ஞாயிறு

பிலிப்பைன்ஸில் மண்சரிவு; பலர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 1 நாள் முன்
26 பார்வைகள்

பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் ‘பாவி’ சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் ‘இண்டே’ (Inday) என அழைக்கப்படும் இந்தச் சூறாவளி கடந்த புதன்கிழமை நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது. இது பிலிப்பைன்ஸ் கடற்பரப்பினூடாக வடக்கு லுசோனை நோக்கி நகர்கையில் சற்று பலவீனமடைந்துள்ளது.

மின்டனாவோ தீவின் தெற்கு சரங்கனி மாகாணத்தில் உள்ள மாலபடன் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு மாலபடன் நகர மேயர் சால்வே சும்போ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் தெற்கு மாகாணமான லானாவ் டெல் சுர் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை, அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய தீவுகளான குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளை இந்த அதிதீவிர சூறாவளி தாக்கியது.

அங்கு உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

சனிக்கிழமை (11) தைவானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஜப்பானின் சில பகுதிகளிலும் இந்தச் சூறாவளி கனமழையைக் கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தைவானில் புயல் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இது சீனாவில் தரைதட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உடைட் (Al Udeid) வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு…

32 0 0
உலக செய்திகள்

கட்டாரின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி காலமானார்

கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி காலமானார். கட்டாரின் முன்னாள் அரசராக இருந்தவர் ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி.…

22 0 0
உலக செய்திகள்

சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் உயிரிழப்பு.!

வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இன்று (11) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

30 0 0
உலக செய்திகள்

திடீரென பரவிய காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.!

தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா பிராந்தியத்தில் உள்ள அல்மேரியா மாகாணத்தில் திடீரெனப் பரவிய காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 19 பேரைக்…

37 0 0