போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 69 கிராம் குஷ் போதைப்பொருள், 18 கிராம் கொகெய்ன் மற்றும் 40 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.