உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
54 பார்வைகள்

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிஸாரின் பங்களிப்புடன் வெளியேற்றபட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,
சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் நகரப் பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம் பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.

அத்துடன் யாழ். மாநகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் யாழ். மாநகரின் ஒத்துழைப்புடன் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிநடத்தலில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் குறித்த நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம் பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு இனிவரும் நாட்களில் இவ்வாறு செயற்படமாட்டோம் என்ற ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0