உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை கடத்தி கப்பம் கோரிய மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
86 பார்வைகள்

சுற்றுலாப் பொலிஸார் எனப் போலி அடையாளத்தைக் காட்டி, பிரேசில் நாட்டுப் பிரஜை ஒருவரைக் கைவிலங்கிட்டுக் கடத்தி, 30 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் உனவடுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, தல்பே பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரேசில் நாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்குள் நுழைந்த இரு சந்தேகநபர்கள், தாங்கள் சுற்றுலாப் பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி அவரது அறையைச் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அந்தப் பயணியின் பிரேசில் நாட்டு கடவுச்சீட்டு, அமெரிக்க ஆவணங்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல உடைமைகளை அவர்கள் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், இவர்களுடன் மூன்றாவது சந்தேகநபர் ஒருவரும் இணைந்து கொண்டுள்ளார்.

மூன்று பேரும் சேர்ந்து அந்தச் சுற்றுலாப் பயணியைக் கைவிலங்கிட்டு அச்சுறுத்தியுள்ளதுடன், அவரைக் கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் கொழும்பிலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதற்காக அவர்கள் 30 இலட்சம் ரூபாவை கப்பமாகக் கோரியுள்ளனர். அதில், மோட்டார் சைக்கிள் ஒன்றை அடகு வைத்ததன் மூலம் தங்களால் 2 இலட்சம் ரூபா திரட்டப்பட்டுள்ளதாகக் கூறிய சந்தேகநபர்கள், மீதமுள்ள 28 இலட்சம் ரூபாவை உடனடியாகச் செலுத்துமாறு சுற்றுலாப் பயணியை வற்புறுத்தியுள்ளனர்.

இது குறித்துக் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், உனவடுன சுற்றுலாப் பொலிஸார் உடனடியாக விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து 25 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஆல்டோ’ ரகக் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைக் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உனவடுன பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0