உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைக் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உப குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

தொழிற்கல்வித் துறையில் புதிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மாணவர்களுக்குப் புதிய தொழில்சார் பாதைகளைத் திறந்துவிடுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கலந்துரையாடல்கள்,

  • உள்கட்டமைப்பு மேம்பாடு
    குறித்த 25 கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தரமுயர்த்துவதற்கான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துதல்.
  • கல்வி வாய்ப்புகள் விரிவாக்கம்
    தற்போதைய சந்தைத் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்வியில் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தல்.
  • முன்னோடித் திட்டம்
    இந்த 25 கல்லூரிகளையும் சிறந்த தொழிற்கல்வி நிலையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே ஆகியோருடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0