உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மாற்றுத்திறனாளிகள் நிலையத்தில் திருடர் கைவரிசை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் குறிகட்டுவான் வீதியில் இயங்கிவருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு யன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடனால் அங்கு காணப்பட்ட சுமார் நான்கு இலட்சத்து எழுபதாயிரம் ( 470,000 ) பெறுமதியான பொருட்களும், 75000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

திருடுவதற்காக உள்நுழைந்த திருடன் நிலையத்தின் முகப்பு வாசல் சுவரில் ஆபாச படம் ஒன்றை வரைந்து நான்தான் படையப்பா எனக்கு யாரும்… என்றவாறு தகாத வார்த்தைகளை எழுதியுள்ளார்.

புங்குடுதீவு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தினை சேர்ந்த படையப்பா என்று அழைக்கப்படுகின்ற லிக்சாந் என்பவர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு நான் தான் படையப்பா என்று விசித்திரமான முறையில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0