உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இளைஞர்களின் கதிர்காம பாதயாத்திரை பச்சிலைப்பள்ளியை சென்றடைந்தது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இன்று அதிகாலை கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் ஆன்மீகப் பாதயாத்திரை பச்சிலைப்பள்ளி பகுதியை சென்றடைந்தது.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஐந்து இளைஞர்களுடன் இந்த ஆன்மீகப் பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமமானது.

காலை 11:00 மணியளவில் பச்சிலைப்பள்ளி, இரட்டைக் கேணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்குப் பச்சிலைப்பள்ளி பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து இளைஞர்கள் இந்த யாத்திரையில் தங்களை இணைத்துக் கொண்டு, கதிர்காமம் நோக்கிய தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முக்கிய அதிகாரிகள், பச்சிலைப்பள்ளி பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு யாத்திரிகர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0