உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 8 என்புகூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையி்ல், 5 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில் , மே மதம் 09ஆம் திகதி சனிக்கிழமை வரையில் 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

அந்நிலையில், 09ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் போது கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் அது முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதைகுழி பகுதிக்குள் செத்தல் தேங்காய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் 14 நாட்கள் நடைபெற்ற நிலையில், 30 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றில்27 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் , புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி , நாணய குற்றிகள் , ஆணிகள் , மஞ்சள் நிற வளையல் துண்டு மற்றும் காசு வடிவிலான தாயத்து உள்ளடங்கலாக 18 பிற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 270 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 267 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி மாயமானவர்களில் மூவர் ச*டலமாக மீட்பு; சிறுவனைத் தேடும் பணி தீவிரம்.!

பமுனுகம, எப்பாமுல்ல கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் (30) மாலை 5.30 மணியளவில் பட்டம் விடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கடல் அலையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்…

63 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சி.!

இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று…

50 0 0
இலங்கை செய்திகள்

அன்று எமது அபிவிருத்தித் திட்டங்களை விமர்சித்தவர்கள் இன்று அவற்றின் அவசியத்தை ஒப்புக்கொள்கின்றார்கள்.!

அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைக் கடுமையான முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கும் முதன்மை மையங்கள் எனத் தங்கள் வாயாலேயே…

65 0 0