உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக ஊழியர்களின் முப்பது ஆண்டு முத்து விழா ஒன்றுகூடல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் “பல்கலைக் கழகமாக” 1996.05.15ஆம் திகதி  பிரகடனப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, 13.05.1996 அன்று நியமனம் பெற்ற ஸ்தாபக ஊழியர்களின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு 2026.05.15ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

 “Pearl Jubilee Anniversary” எனப் பெயரிடப்பட்ட இம்முத்து விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களின் முப்பது ஆண்டுகால பணிச்சேவையையும் நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வு ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான  எஸ்.ஏ.சி.எம். ஜுனைடீன்  நெறிப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியரும் தற்போதைய சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0