உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யூசி மாஸ் மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா; சாதனை மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் மன்னார் மற்றும் முருங்கன் மையங்களுக்கு இடையிலான போட்டி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (26) மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை மாலை யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

யூசி மாஸ் (UCMAS) மன்னார் நிறுவனத்தின் இயக்குனர் நடராஜா கேதீஸ்வரன் மற்றும் திருமதி யசோதா கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கை வங்கி, மன்னார் கிளையின் முகாமையாளர் ஐ. அருளானந்தன் சோசை கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக முருங்கன் ஆரம்பப் பாடசாலை அதிபர் ஏ.ஆர். தேவநேசன், மன்னார்/எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். அஸ்மி, மன்னார்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் சாந்தியாகு F.S.C, மன்னார் லா சால் ஆங்கில பாடசாலை உப அதிபர் அருட்சகோதரர் பிரிட்டோ பின்டோ F.S.C, மன்னார் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சி.பி. வின்சென்ட், மன்னார் மாவட்ட செயலக கணக்காளர் எஸ். செல்வகுமார், இலங்கை யூசி மாஸ் செயற்பாட்டு பணிப்பாளர், தலைமை நடுவர் திருமதி. சித்ரா இளமநாதன், யூசி மாஸ் இலங்கை கிளை உரிமைப் பணிப்பாளர், திருமதி தயாளினி பாசங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கடந்த வருடம் ஜோர்ஜியாவில் நடைபெற்ற யூசி மாஸ் சர்வதேச மட்ட போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி வெற்றிக் கேடயம் வழங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களினால் வெற்றி கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யூசி மாஸ் (UCMAS) மன்னார் மற்றும் முருங்கன் கிளையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0