உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வெற்றிவாகை சூடிய வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா இன்று (27.03.2026) காலை 7.30 மணியளவில் பாடசாலை அதிபர் பெரியசாமிபிள்ளை லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் எஸ். ரகு அவர்கள், இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி புவனேஸ்வரி கணேசன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், உதவி அதிபர், ஆசிரிய பிரதிநிதி மற்றும் மாணவத் தலைவர் ஆகியோரால் மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு இனிதே தொடங்கியது.

பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து, அதிபரின் தலைமையுரையும், கதிரேசன் மத்திய கல்லூரி அதிபரின் வாழ்த்துரையும் இடம்பெற்றன. தொடர்ந்து இந்து மகளிர் கல்லூரி அதிபருக்கான பாராட்டு நிகழ்வுடன் அவரது சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.

விழாவின் முக்கிய அங்கமாக தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு வரிசையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருமதி M. சரஸ்வதி அவர்களின் நேர்த்தியான நிகழ்ச்சித் தொகுப்பில் நடைபெற்ற இவ்விழா தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0