உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கருணையம்பதி சனசமூக நிலையத்தின் கட்டிட திறப்பு விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
59 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி காரணவாய் கரணையம்பதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று காலை 9:00 மணியளவில் கருணையம்பதி சன சமூக நிலைய தலைவர் தனபாலசிங்கம் செல்வகுமார் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா அவர்கள் சிறப்புரை நிகழ்தினார்.

அதனை தொடர்ந்து கருணையம்பதி சமூகத்தால் துணை வேந்தர், திருமதி துணை வேந்தர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

புலம்பெயர்ந்த கருணையம்பதி வாழ் உறவுகளின் நிதி பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட கருணையம்பதி சனசமூக நிலைய திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர், வவுனியா மாவட்ட சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர், நாகலிங்கம் கமலதாசன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திர சிகிக்சை நிபுணர் கந்தசாமி உமாசங்கர், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், யா/கரணவாய் தாமோதரா வித்தியாலய அதிபர் ஆனந்தராசா விமலராஜா மற்றும் கிராமசேவகர், கிராம மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0