உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வடக்கில் மீண்டும் தமிழரசு ஆதிக்கம் செலுத்தும்; முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தயார்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

வரும் மாகாண சபைத் தேர்தலின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தான் விரும்புகின்றார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“மாகாண சபைத் தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நான் விரும்புகின்றேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் ஆட்சியமைக்க முடியும் என்ற பலமான நம்பிக்கை எமக்கு உள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவு அவசியமாகும்.

தற்போதைய ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி., நாட்டை ஒரு கட்சி முறைமையை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் காணப்படுகின்றது. நாம் சோசலிசக் கொள்கைகளை ஆதரிக்கின்ற போதிலும், ஒரு கட்சி ஆட்சியை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் ஜே.வி.பி. பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியானது, பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையிழப்பைப் பிரதிபலிக்கின்றது. இருப்பினும், வடக்கு – கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும்.” – என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0