உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சொகுசு பேருந்தில் பயணித்த நபர் திடீரென உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் பயணித்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் மேற்படி நபர் பயணித்துள்ளார். பேருந்து வவுனியாவை வந்தடைந்த நிலையில், நீண்ட நேரமாக அவர் எவ்வித அசைவுமின்றி இருப்பதைக் கவனித்த பேருந்து நடத்துநரும், சாரதியும் சந்தேகமடைந்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட அவர்கள், அந்த நபரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அலாவுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் புத்தளம் பகுதியிலிருந்தே குறித்த பேருந்தில் ஏறினார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0