உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெருமளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையை பாரவூர்தி ஒன்றில் கடத்திச் சென்ற சாரதி ஒருவரை நீர்கொழும்பு மதுவரித்திணைக்கள அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை (21) கைது செய்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் இந்தியாவிலிருந்து மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கேரளா கஞ்சா பொதிகள், சிறிய பாரவூர்தி ஒன்றின் மூலம் குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நீர்கொழும்பு மஹா ஹுனுபிட்டிய பகுதியில் வைத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சுமார் 85 கிலோ கிராம் எடையுள்ள இந்தக் கேரளா கஞ்சா, 40 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பின்னர் அவை 2 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக மதுவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மொத்த பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதுடன், அவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் பாரவூர்தி சாரதி மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சனிக்கிழமை (21) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0