உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் பறவைகள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் மூன்று(3) வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாகிய பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது. இந்த நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்து காரணமாக 2 வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு பறவை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0