உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்பு; கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், தற்போது நடைமுறையிலுள்ள பல கலாசாரத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை அப்பகுதி மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பது மற்றும் அதன் எதிர்காலப் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்தியா வழங்கவுள்ள ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை கலாசார ரீதியாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு இந்தச் சந்திப்பு வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0