உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஆட்சியாளர்களுக்கு முன்னரே தெரியுமா?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா? என்று சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹான் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி நெருங்கும் போது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான நீதி மற்றும் விசாரணைகள் குறித்து சமூகத்தில் ஒருவித பதற்றமும் எதிர்பார்ப்பும் தானாகவே உருவாகின்றது. கடந்த ஏழு வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போதைய நகர்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் அவரது பெயர் இந்தச் சம்பவங்களுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாதவாறு மறைப்பதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சுரேஷ் சலேயின் கைதுக்கு ‘சனல் 4’ ஊடகத்தில் அசாத் மௌலானா வெளியிட்ட கருத்துக்களே காரணம் எனப் பலர் கருதுகின்றனர். ஆனால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையின்படி, இராணுவத்தில் பணியாற்றிய சிலரின் சாட்சியங்களே இந்தத் தீர்மானம் மிக்க கைதுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து முன்னரே அறிந்திருக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் உள்ளன. இவ்வளவு காலம் கழித்து தற்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளமை குறித்துச் சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0