உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நோயாளர் காவு வண்டி இல்லாததால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

நோயாளி ஒருவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றது. அந்த விபத்தில் காயமடைந்தவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கே சிகிச்சையளிக்க கூடிய வசதி இருக்கவில்லை. அத்துடன் குறித்த நோயாளியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியும் இல்லை.

இதேவேளை அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கும் நோயாளர் காவு வண்டி இருக்கவில்லை. இதனால் குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எமது வைத்தியசாலையில் பெரிய பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லை.

கிளினிக் வசதி இருந்தாலும், இரண்டு வைத்தியர்களே கடமையில் இருப்பதால் மக்கள் பி.ப 5.00 மணிவரை காத்திருந்து சேவையை பெறவேண்டிய தேவை உள்ளது. தாதியர் இருந்தால்கூட சில சேவைகளை பெற முடியும். ஆனால் இந்த வைத்தியசாலைக்கு ஒரு தாதியர் கூட இல்லை.

நாய் கடிக்கு இலக்கானவர்கள் முதலாவது ஊசியை வைத்தியசாலையில் பெற்றுவிட்டு அடுத்த ஊசிக்காக வரும்போது சங்கானை அல்லது காரைநகர் வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறுகின்றனர். சாதாரணமாக ஒரு ஊசியை போடுவதற்கு வந்தால் கூட அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

இரவு வேளையில் வைத்தியசாலைக்கு வந்தால் வைத்தியர் இல்லாத காரணத்தால் நோயாளர் காவு வண்டி தர முடியாது என்று சொல்கிறார்கள். பி.ப 6.00 மணிக்கு பின்னர் வைத்தியசாலை பூட்டப்பட்டிருக்கும். அவசிய சுகாதார சேவைகளை பெறுவதற்கு வரும்போது வைத்தியசாலை பூட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்ககூடிய விடயம்.

ஆகவே எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியசாலை சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0