உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தனியார் பேருந்து சேவை முடங்கும் அபாயம் கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,பேருந்து போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் டிப்போக்களில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதாகவும், இதனால் பேருந்து உரிமையாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையால் வரும் திங்கட்கிழமை பேருந்து சேவைகள் கணிசமான அளவு பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், இது குறித்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன மேலும் கூறியதாவது:

“பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை தயாரித்து முடிக்கவில்லை. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக சுமார் 1,700 தூர இடங்களுக்கான பேருந்துகளுக்கு மாத்திரமே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளிடமிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில பகுதிகளில் இ.போ.ச டிப்போக்களில் எரிபொருள் வழங்கப்படுகிறது, ஆனால் ஏனைய டிப்போக்களுக்குச் செல்லும்போது அங்கு எரிபொருள் இல்லை என்கிறார்கள். இது ஒரு பாரிய பிரச்சினை.

எதிர்வரும் திங்கட்கிழமை எம்மால் பேருந்துகளைச் இயக்க முடியாது. பெரும்பாலும் பேருந்து சேவைகள் 50மூ வரை வீழ்ச்சியடையக்கூடும். கடந்த வாரம் எமது பேருந்துகளில் எரிபொருள் இருந்ததுஇ ஆனால் தற்போது அது தீர்ந்துவிட்டது. QR முறைமையின் கீழ் பேருந்துகளுக்கு 60 லீற்றர் மாத்திரமே கிடைக்கிறது. டிப்போக்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்புமாறு அதிகாரசபைகள் அறிவித்துள்ளன.

பகல் வேளையில் டிப்போக்களில் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பினால் பேருந்துகளைச் ஓட்ட முடியாது. கடந்த சில நாட்களாகியும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கோ அல்லது போக்குவரத்து அதிகாரிகளுக்கோ இன்னும் முடியாமல் போயுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0