நுவரெலியா: கிளாஸ்ஷோ தோட்டத்தில் தீ விபத்து.!
நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஒரு குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதால் அந்த குடியிருப்பு முற்றாக எரிந்து நாசமானது.
வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயினால் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடியிருப்பில் வசித்து வந்த ஐந்து பேர் தற்போது உறவினர்கள் வீடுகளில் தங்கி பாதுகாப்பாக இருக்கின்றனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதை தொடர்பாக நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொறுப்பதிகாரி தெரிவித்தார்.