உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெருநாள் தினத்தில் கடற்கரை பகுதியை அழகுபடுத்திய கல்முனை கடற்படை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் கடற்கரைகளில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக், கண்ணாடி, டின் போன்ற கழிவுகள் பரவலாக காணப்பட்ட நிலையில், சமூக ஊடகங்களில் இதுகுறித்த தகவல்கள் அண்மையில் வெளியானன.இதையடுத்து பல்வேறு தரப்பினரும் “சிரமதானம்” என்ற பெயரில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.


கல்முனை பகுதியில் அமைந்துள்ள கடற்படை ஸ்ரீலங்கா நௌ தீகாயு முகாம் படையினரால் இன்று பெருநாள் தினம் மற்றும் கிழமைகளில் கடற்கரைப்பகுதிகளில் தேங்கி காணப்படும் பிளாஸ்டிக், கண்ணாடி, டின் போன்ற கழிவுகள் உரப்பையில் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகள் முறையாக துப்புரவு செய்யப்பட்டுள்ளது.


கடற்கரையில் கழிவுகள் அதிகமாக காணப்படுவதற்கு, அடைமழை காரணமாக உருவான வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக கடந்த காலங்களில் வெட்டப்பட்ட தற்காலிக கால்வாய்கள் காரணமாக, கடற்கரைப்பகுதிகளில் கழிவுகள் கரை ஒதுங்கி நின்றுபரவியுள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவுகள் பரவலாக இருந்தது.இவை மீன்பிடி தொழிலில் மீனவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதோடு, வலைகளிலும் சிக்கி பல சிரமங்களை உண்டாக்கியிருந்தது.


இந்த நிலையில் அனைத்து பிரதேசங்களிலும் கடற்படை படையினரால் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு, கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமாக செய்யப்பட்டுள்ளன.


தற்போது, கிழமைகளில் படிப்படியாக கனரக வாகன உதவியுடன் இந்த நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.மேலும், மாலை வேளையில் இக்கடற்கரையை நோக்கி சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தமது ஓய்வு நேரங்களை கழிக்க வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0