உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ரமழான் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் பிறரின் துன்பங்களை உணர்ந்துகொள்ளுதல் போன்ற உன்னத மனிதாபிமானப் பண்புகளை வாழ்வோடு இணைத்து உயரிய விழுமியங்களைத் தனிப்பட்ட வாழ்வோடு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாது, நாட்டின் பொதுநலனைக் கருதிப் பயன்படுத்துவதே முக்கிய தேவையாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு இலங்கையர் என்ற வகையில் ஒரே கொடியின் கீழ் அணிதிரள எம்மை ஊக்குவிப்பதாகவும் சமய மற்றும் கலாசாரப் பிணைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம், இனங்களுக்கிடையே கட்டியெழுப்பப்படும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தை அடித்தளமாகக் கொண்ட அஸ்திவாரத்தின் மீதே நாட்டின் நிலையான சமாதானமும் சுபீட்சமும் தங்கியுள்ளதாக ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

சகோதரத்துவத்துடன் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், உலகம் முழுவதும் நிலவும் யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் துரதிர்ஷ்டவசமான போர்ச் சூழலினால் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் எதிர்நோக்கியுள்ள மிகக் கடினமான மற்றும் வேதனையான நிலை குறித்து கவலை கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0