கல்முனையில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று.!
புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை இன்று (21) கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி ஏ. கலீலுர் ரஹ்மான் (ஸலபி) அவர்கள் நடத்தினர். கல்முனை பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டனர்.