மன்னார் மாவட்டத்தில் புனித நோன்பு பெருநாள் தொழுகை.!
புனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று (21) மன்னார் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றது.
மூர்வீதி ஜும்மா பள்ளியில், பிரதான மௌலவி அசீம் தலைமையில் பெருநாள் தொழுகை மற்றும் பிரசங்கம் இடம்பெற்றது. இதேவேளை, மாவட்டம் முழுவதும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக நடைபெற்றன.
புனித பெருநாள் தொழுகை முடிந்தவுடன், மக்கள் தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.மக்கள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.