சட்டவிரோத எரிபொருள் விற்பனை: 39 வயதுடைய நபர் கைது.!
புலத்கொஹுபிட்டிய பொலிஸார் , நேற்று மாலை 55 லீற்றர் பெட்ரோலை சட்டவிரோதமாகச் சேமித்துக் கொண்ட 39 வயதுடைய நபரை கைது செய்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கேகாலை மற்றும் பொஸ்ஸல்ல-தம்பேல்கொட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் பிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்குப் பிறகு கேகாலை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார், என புலத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.