உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ராகம துப்பாக்கிச் சூடு: கொ*லை முயற்சி வழக்கில் சந்தேக நபர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாதம்பை – இஸ்சம்மடில்ல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் பாரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.


சந்தேகநபரின் வாக்குமூலத்திற்கு அமைய, அவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 போர்ட் ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 14 தோட்டாக்கள் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டன.கைப்பற்றப்பட்ட ஆயுதம் முன்பு ஏதேனும் பாரிய குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தடயவியல் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மேலும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் தனிப்பட்ட விரோதமா அல்லது பாதாள உலகக் குழுக்களின் தொடர்பா என்பது குறித்தும் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0