உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இடமில்லை; கொதித்தெழுந்த சாணக்கியன்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
44 பார்வைகள்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எவ்விதமான சர்வதேச விசாரணைகளையும் முன்னெடுப்பதை அரசு கடுமையாக எதிர்ப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் உரையாற்றுகையில், “2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்ட காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 764 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த எண்ணிக்கை விவாதத்துக்குரியது. காணாமல் போனவர்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் தற்போது எமது வசம் இல்லை.” – என்றார்.

போர்க் காலப்பகுதியில் இரு தரப்பினருமே இத்தகைய காணாமலாக்கல் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்ட அமைச்சர், அரசு ஒருபோதும் இத்தகைய செயல்களை ஆதரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு சர்வதேச அமைப்போ அல்லது வெளித்தரப்போ விசாரணை நடத்துவதை அரசு அனுமதிக்காது என்று தெரிவித்த நீதி அமைச்சர், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

நீதி அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டித்தார்.

“காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதி வழங்குவதிலும், பொறுப்புக்கூறலிலும் அரசிடம் முறையான அல்லது தெளிவான கொள்கை எதுவும் இல்லை. அமைச்சரின் தரவுகள் முரணாக உள்ளன.” – என்று சாணக்கியன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காகப் போராடி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதம் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0