உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழில் யானைகள் அட்டகாசம்; அச்சத்தில் மக்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் உட்புகுந்து வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களம் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கி விட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வன ஜீவராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அப் பிரதேசங்களில் இதுவரை யானைகள் அங்கு காணப்பட்டிருக்கவில்லை. இந் நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு யானை தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட நிலையில் அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0