உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கஜபாகு கப்பலை பார்வையிட்ட அமெரிக்க விசேட பிரதிநிதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

அமெரிக்காவின் விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர், இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுடன் இணைந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு (SLNS Gajabahu ) கப்பலில் பயணம் மேற்கொண்டார்.

இது குறித்து அமெரிக்கத் தூதரகத்திக் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி,
இந்த SLNS Gajabahu கப்பல், முன்னதாக அமெரிக்க கடலோர காவல் படைக்கு (U.S. Coast Guard) சொந்தமான கப்பலாக இருந்து பின்னர் இலங்கை கடற்படைக்கு மாற்றப்பட்டதாகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கடல்சார் ஒத்துழைப்பின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், அமெரிக்க கடலோர காவல் படையின் முன்னாள் DECISIVE கப்பல் (ex-DECISIVE) தற்போது பசிபிக் கடல் வழியாக இலங்கை நோக்கி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அது இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைப்பு, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான இராணுவத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான கடல்சார் கூட்டாண்மை, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0