வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு செவி சாய்க்காத பல வடமாகான வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை..!
வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.சங்கத்தின் தகவலின் படி, சங்க விதிமுறைகளை மீறிய சிற்றூர்தி பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஒருவரை ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில், சங்க கட்டுப்பாட்டு அறிக்கையில் பதிவு செய்யப்படாத சிற்றூர்தி பேருந்தில் பயணிகளை ஏற்ற அனுமதி, வடமராட்சி வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அலுவலர் மற்றும் நேர கனிப்பாளர் வழங்கியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் சங்க நடவடிக்கைகள் மதிக்கப்படவில்லை எனக் கூறி, சங்கம் உரிய அதிகாரிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும், சங்கம்தமது நேர கனிப்பாளர் அலுவலகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.