உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வடமராட்சி கிழக்கு இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம், முன்தினம் (மார்ச் 17) வடமராட்சி கிழக்கு செம்பியன் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.நிகழ்வில் புத்தளம் மாவட்டத்திலிருந்து வருகை தந்த இளைஞர்கள், வடமராட்சி கிழக்கு செம்பியன் இளைஞர்கள் கழகத்தினரும், வடமராட்சி கிழக்கு இளைஞர்களும் அவர்களை அன்புடன் வரவேற்று நிகழ்வுகளைத் தொடங்கினர்.


இன்றைய (19) தினம், புத்தளத்திலிருந்து வருகை தந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள், வடமராட்சி கிழக்கின் வரலாற்றுப் பின்னணியால் உருவாக்கப்பட்ட கிராமிய விளையாட்டுகளை அனுபவித்து மகிழ்ந்தனர். அத்துடன், தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை புத்தள இளைஞர்கள் யுவதிகளுக்குச் சமைத்து வழங்கி, அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.பின்னர், வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் மற்றும் புத்தளம் இளைஞர்கள் செம்பியன் பற்று வடக்கு கடற்கரையில் மாலைப்பொழுதை கழித்தனர்.

நிகழ்வின் இறுதியில், செம்பியன் பொது நோக்கு மண்டபத்தில் இளைஞர்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக முன்னெடுத்தனர்.இவ்வாறு, இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம், மகிழ்ச்சி, பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சமூக உறவை வலுப்படுத்தும் விதமாக வெற்றிகரமாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0