உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டக்களப்பில் காணி பிரச்சினை: பிரதேச மக்கள் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மட்டக்களப்பின் எல்லைப்பிரதேசங்களில் மக்கள், வாழ்வாதார முன்னேற்றத்தைப் பொருட்படுத்தி காணிகளைப்பெற முயலும்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதே சமயம், வனஇலாகாவின் அச்சுறுத்தல்களும் அவர்கள் மீதான பிரச்சினைகளை அதிகரிக்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், பெரியபுல்லுமலை மற்றும் கரடியனாறு பிரதேசங்களில் காணி தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம், சம்பூர் மற்றும் திரியாய கிராமங்களில் காணி பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஆவணப்படக் காட்சியும், கலந்துரையாடலும் இடம்பெற்றது.


நிகழ்வை அகம் மனிதாபிமான வளநிலையம் மற்றும் பிசிசிஜே இணைந்து கிழக்கு மாகாண காணி வலையமைப்பின் வழியாக முன்னெடுத்தனர். நிகழ்வில் அகம் மனிதாபிமான வளநிலைய பணிப்பாளர் க. லவகுசராசா, இணைப்பாளர் மதன், கிழக்கு மாகாண காணிவலையமைப்பின் தலைவர் எஸ். சிவயோகநாதன், உறுப்பினர் ஜோதி, பிசிசிஜே அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச கிராம சேவையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


ஆவணப்படக் காட்சியைத் தொடர்ந்து பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அவர்களது கருத்துகளும் பதிவு செய்யப்பட்டது.அதேபோல், கரடியனாறு பிரதேசத்திலும் ஏஎச்ஆர்சி மற்றும் பிசிசிஜே இணைந்து, காணி பிரச்சினைகளைப் பற்றிய கலந்துரையாடல் மற்றும் ஆவணப்படக் காட்சி நடத்தினர்.

இதில் பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் மூலம், மக்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும், காணி பிரச்சினைகளை சரியான முறையில் தீர்க்க தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க விழிப்புணர்வு உருவாக்கியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0