உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதுவரை இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ அல்லது அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்போ சுரேஷ் சலேவுக்கு எதிராக எந்தவித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.


மேலும், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காக சிலர் திட்டமிட்டு பரப்பிய குற்றச்சாட்டுகளையே தற்போதைய அரசு ஆதாரமாகக் கொண்டு செயல்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.யுத்த காலத்தில் நாட்டுக்காகச் சேவை செய்த ஒரு மூத்த இராணுவ அதிகாரியை தற்போதைய அரசு பழிவாங்கும் நோக்கில் குறிவைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


அத்துடன், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலையில், சிறிய காரணங்களை முன்வைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் தவறான பார்வையை உருவாக்க முயற்சி செய்யப்படுகின்றது என்றும் சரத் வீரசேகர குற்றம் சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0