ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு.!
முஸ்லிம் மக்களின் ரமழான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இஸ்லாமிய மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றதுடன், மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் உரையாற்றினார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரதி அமைச்சர்கள் அருண் ஹேமச்சந்திர, ருவன் ரணசிங்க, அர்கம் இல்யாஸ் உள்ளிட்டோர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலி பல்தசார் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மத நல்லிணக்கத்தைவலியுறுத்தும் இந்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.
