உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை; நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றையதினம் அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

முதல் வீட்டில் சுமார் 10 பவுன் தங்க நகைகளும், இரண்டாம் வீட்டில் 70,000 ரூபாய் ரொக்கமும், மூன்றாம் வீட்டில் 5 குவைத் தினார் மற்றும் 30 இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களும் கொள்ளையர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் போது பயன்படுத்தப்பட்ட பொலிஸ் மோப்ப நாய், கொள்ளை நடைபெற்ற வீடுகளிலிருந்து புறப்பட்டு, சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாகக் கருதப்படும் ஒரு வீட்டிற்குள் இரண்டு முறை சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த வீட்டில் இருந்த நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய இருவர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கைரேகை அடையாள நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0