உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மகிந்தவின் ஊழல் மோசடி; வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் மூலம் கிடைத்த நிதியிலிருந்து 60 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (19) நீதிமன்றத்தில் அறிவித்தது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஏர்பஸ் இலஞ்ச விசாரணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் வெளியானது.

இந்நிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்திரசேனவை ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தச் சமர்ப்பணத்தின்படி, குறித்த 60 மில்லியன் ரூபா மூன்று சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் பின்னணியாக, 2012 – 2013 காலப்பகுதியில் SriLankan Airlines நிறுவனத்திற்காக விமானங்களை வாங்கிய ஒப்பந்தத்தில் ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி, ஏயார் பஸ் நிறுவனத்துடன் 6 A330 மற்றும் 4 A350 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான மோசடி குறித்த தகவல்கள் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் வெளிச்சத்திற்கு வந்தன.

அந்த விசாரணையில், 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இலஞ்சம் வழங்கப்படவிருந்ததாகவும், அதில் 2 மில்லியன் டொலர் தொகை சந்திரசேனாவின் மனைவியுடன் தொடர்புடைய புருனேயைச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

மேலும், அந்த நிதி புருனேயிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள கணக்குகள் வழியாக பல கட்டங்களாக மாற்றப்பட்டிருந்ததுடன், சிங்கப்பூரிலிருந்து இலங்கையிலுள்ள கணக்குகளுக்கும் பணம் பரிமாறப்பட்டிருந்தது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின்வின் மகனான சமிந்திர இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு அவரது வங்கிக் கணக்கில் 160,000 அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கிற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0