தங்கத்தின் விலையில் வீழ்ச்சி.!
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (19) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4843 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவலின் படி,
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 398000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 366200 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.