உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நீண்டகாலத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசலகூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் 2026 ஆண்டிற்கான வருடாந்த இப்தார் நிகழ்வும் கடந்த புதன்கிழமை(18) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் 2026 ஆண்டிற்கான வருடாந்த இப்தார் நிகழ்வில் ஆன்மீக உரையினை கல்முனை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் முர்ஷித் முப்தி நிகழ்த்தினார்.

இது தவிர கிராஅத், அதிபர் உரை, ஆன்மீக உரை, வலயக் கல்விப் பணிப்பாளர் உரை, நன்றியுரை, ஸலவாத், என இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

மேலும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் கௌரவ அதிதியாக பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தார். பிரதி, உதவி கல்வி பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், வலய தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நீண்டகாலத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசலகூடங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பிரதம அதிதியான கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீமினால் கையளிக்கப்பட்டது.

மேலும் மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு புதிய திசையை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இவ்விழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0