உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிகரெட்டுகளுடன் சிக்கிய பெண்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சுமார் 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீன நாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தின் ஊடாக எவ்வித அறிவித்தலுமின்றி இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போது சுங்க அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சீனாவின் செங்டு நகரிலிருந்து ஏயார் சீனா நிறுவனத்திற்குச் சொந்தமான ஊயு-425 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 190 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் 38,000 சீன தயாரிப்பு சிகரெட்டுகள் இருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீனப் பெண்கள் இருவரும் தற்போது சுங்கப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0