உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சமூக செயற்பாட்டாளரும், சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவர் விளக்கமறியலில்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவரை ஏழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக முகப்புத்தகத்தில் அவதூறானதும் உண்மைக்கு புறம்பானதுமான கருத்துகளை தெரிவித்து வந்தமை தொடர்பிலேயே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மைலம்பாவெளியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியில் முச்சக்கரவண்டி திருத்தும் நிலையம் ஒன்றினை அனுமதியில்லாமல் அமைத்து நடாத்துவது குறித்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் கொக்குவில் பொலிஸ் நிலையம் ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் காணி சீர்திருத்த ஆணையாளருக்கு எதிராக தொடர்ச்சியாக முகப்புத்தகம் ஊடாக உண்மைக்கு புறம்பான தகவல்களையும் அவதூறு ஏற்படுத்தும் கருத்துகளையும் தெரிவித்து வருவதாக ஆணையாளரினால் கொக்குவில் பொலிஸார் ஊடாக நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அமைய குறித்த விளக்கமறியல் உத்தரவு கடந்த 16ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0