உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்திய அரசின் உதவியில் புத்தளத்தில் கட்டப்பட்ட பாலம் திறப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிலாபம்–தொடுவா தற்காலிக இரும்பு பாலம் இன்று (18) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. அண்மைய டிட்வா புயலின் போது கடுமையாக சேதமடைந்த இந்த பாலம், எதிர்கால அவசர நிலைமைகளை சமாளிக்க இந்தியா வழங்கிய உதவி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.


240 மீட்டர் நீளமுடைய பாலம் நிர்மாணத்திற்கு 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு, இந்தியா வழங்கிய உதிரிப்பாகங்களும் பயன்படுத்தப்பட்டன. குறுகிய காலத்தில் இந்திய இராணுவ பொறியியலர் குழுவினரால் பணிகள் முடிக்கப்பட்டது.
பாலத்தை திறந்துவைக்க இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மற்றும் பல அதிகாரிகளும் நிகழ்வில் இருந்தனர்.இந்த பாலம் மீண்டும் போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்துவதோடு, மக்கள் தினசரி பயணம், மீன்பிடி தொழில், சிறு வணிக நடவடிக்கைகள் மற்றும் அவசர சேவைகளுக்கு முக்கிய உதவியாக இருக்கும். திட்டம் இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0