சட்டவிரோத எரிபொருள் விநியோகத்தை முடக்க நடவடிக்கை.!
சட்டவிரோத எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களும் கட்டாயமாகச் செயல்பட வேண்டும் எனவும், அவற்றை மீறி செயல்படும் நிலையங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்கும் வகையில் விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி, எரிபொருள் மோசடி அல்லது விதிமுறை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 0112106767 மற்றும் 0117296130 ஆகிய இலக்கங்களுக்கு தெரிவிக்கலாம் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.