யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்.!
விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயக உரிமைகளை கோரி நாளை (காலை 10.00 மணி) பல்கலைக்கழக முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாணவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.